பொங்கும் செயல்கள்
எந்த இடைவெளியுமற்று
பொங்கிப் பொங்கித்
தொடர்ச்சியாக
நிகழ்ந்து கொண்டிருக்கின்றன
பெரும்பான்மை செயல்கள்
ஒவ்வொருவருக்கும்
ஒரே மாதிரியாக
ஒவ்வொரு ஆண்டும்
ஒவ்வொரு மாதமும்
ஒவ்வொரு வாரமும்
ஒவ்வொரு நாளும்
சில நேரங்களில்
சில இடைவெளிகளும்
சிறுபான்மை செயல்களும்
பெரும்பான்மை
செயல்களுள்
ஒன்றாகி