புத்தகங்கள் - 2
புத்தகங்கள் - 2
நூற்றாண்டு நூற்றாண்டுகளாய் கடந்த மொழிகள் மற்றும் எழுத்தின் வரலாறு,
தொடர்ந்து அடுத்த சந்ததிக்கு வாய்மொழி வழியாகவே பரவித் தொடர்ந்தது. ஒரு
மொழி இரு மொழிகளல்ல, கடந்த நூற்றாண்டு வரை சுமார் 6800 மொழிகள் பேச்சு வழக்கில்
இருந்தன. தற்பொழுது பேச்சு வழக்கில் உள்ள மொழிகளின் எண்ணிக்கை 6500. அவற்றில் 3000 மொழிகள் மறையும் தருவாயில் உள்ளன. அவற்றில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மொழிகளை 2000-க்கும் குறைவானவர்களே பேசி வருகின்றனர்.
இந்த நூற்றாண்டின் முடிவில் (21-ஆம் நூற்றாண்டு) சுமார் 2000 மொழிகள் முற்றிலும் அழிந்து விடும். இந்தியாவில் மட்டுமே தற்பொழுது சுமார் 1600.மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளன.
மொழி என்பது வெறும் பேச்சுக்கானது மட்டுமே என்று கருதும் 80% மக்கள் இருந்த சூழலில் இத்தனை மொழிகளையும் காப்பாற்றி இவ்வளவு காலம் நகர்த்தி வந்தது பேச்சுமொழி மட்டுமே அல்ல.
கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் சீனாவில் காகிதம் செய்யும் தொழில்நுட்பம் கண்டு பிடிக்கப்பட்டு சில நாடுகளுக்கு காகிதம் ஏற்றுமதி செய்யப்பட்டது. சுமார் 600 ஆண்டுகள், காகிதம் செய்யும் தொழில்நுட்பம் சீனர்களிடம் மட்டுமேமே இருந்தது.
கி.பி பன்னிரண்டாம் நூற்றாண்டில் காகிதம் ஐரோப்பாவிற்கு சென்ற பிறகு, காகிதம் தயாரிக்கும் தொழில் நுட்பம் பிற நாடுகளுக்கும் பரவியது.
காகிதத்துக்கு முன் பனையோலையில் எழுத்தாணி மூலமும், பாறைகளிலும், களிமண் தட்டுகளிலும், கல்வெட்டுகளிலும், செப்புத் தகடுகளிலும் கீறியே பாடல்களும், சாசனங்களும், அறிவிப்புகளும், சட்டங்களும், புராண,இதிகாசங்களும் இயற்றப்பட்டன.
கி.பி. 1450 ல் அச்சு எந்திரம் கண்டுபிடிக்கப்படும் வரை எழுத்துக்கள் அனைத்தும், ஓலைச் சுவடிகளிலும், கோவில் சுவர்களிலும் பதியப்பட்டன. 1450-க்குப் பிறகே அச்சு நூலகள் உருவாகின.
அச்சு நூலகள் உருவானதற்குப் பிறகுதான், தத்துவம், கணிதம், அறிவியல்,இலக்கியம், மதம்,அரசியல், ஓவியம்,கல்வி போன்ற துறைகளில் பாய்ச்சல் துவங்கியது.நூல்களின் எண்ணிக்கை உயர உயர, அதனைப் படிப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது.
கல்வி கற்றவர்கள் பலநூல் பயின்று தத்துவவாதிகளாகவும், விஞ்ஞானிகளாகவும்,கவிஞர் களாகவும்,ஓவியர்களாகவும்,பொறியா
பன்மைத்தன்மை அச்சு நூல்களால் அதிகரிக்கத் தொடங்கியது. புதிய வார்த்தைகள், வாக்கியங்கள்,கவிதைகள், கதைகள், கட்டுரைகள், தத்துவங்கள்,கணிதம், அறிவியல் ஆய்வுகள் என மொழி விரிவடையத் தொடங்கியது.
-தொடரும்