எங்கெங்கும்
இதோ
இப்பொழுது
இங்கு
நிகழ்பவைகளில்
பெரும்பாலும்
முன்பே
நிகழ்ந்ததுதான்
இன்னும்
சற்று நேரத்தில்
நிகழவுள்ளவைகளில்
மட்டுமேயிருக்கிறது
யாராலும் கவனிக்க முடியாத
மிகச்சிறிய மாற்றம்
இதோ
இப்பொழுதும்
இங்கும்
இன்னும்
சற்று நேரத்தில்
என்பதும்
இருந்து கொண்டேயிருக்கின்றன
எப்பொழுதும்
எங்கெங்கும்